மயிலாடுதுறை, காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. 1.துலா கட்ட விஸ்வநாதர், 2. திருவிழந்தூர் விஸ்வநாதர்,  3.வள்ளலார் விஸ்வநாதர், 4.படித்துறை விஸ்வநாதர், 5.பெரிய கோயில் விஸ்வநாதர், 6.கூறைநாடு விஸ்வநாதர், 7.தெப்பக்குளம் விஸ்வநாதர், ஆகிய ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. 




இவற்றில் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவியுடன் புதிதாக கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.




தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத முதல் யாகசாலை பூஜைகள் நேற்று இரவு துவங்கியது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் யாகசாலை பூஜைகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து திருக்கடையூர் ஸ்ரீ நிருத்தியாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Vinayagar Chathurthi 2022 : சிவாங்கி முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்த செளத் குயின்ஸ்!




மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு வழிபாடு


விநாயகர் சதுர்த்தி விழா  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். மேலும், வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. 




தொடர்ந்து மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை வரவழைக்கப்பட்டு சிவவாத்தியங்களுடன் யானையை பக்தர்கள் கோயிலுக்கு அழைத்து வந்தனர். யானைக்கு வெள்ளி கொலுசு அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை, வழங்கியும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது, யானை புனித நீரை துதிக்கையால் முகர்ந்து தீர்த்தமாக தெளித்தது. பக்தர்கள் யானைக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகள் தோறும் யானையை வரவேற்று ஆராத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தங்கள் இல்லம் தேடி வந்த விநாயகர் உருவான யானையினை கண்டு குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.