Pournami 2024: பக்தர்களே! இந்த மாசம் பௌர்ணமி எப்போது வருது? கிரிவலம் செல்ல சரியான நேரம் எது?

Pournami 2024: செப்டம்பர் மாதத்தில் பெளர்ணமி எப்போது வருகிறது? கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

பொதுவாக ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும். இந்த நிலையில், இந்த மாதத்தில் எப்போது பௌர்ணமி வருகிறது என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

பௌர்ணமி எப்போது?

செப்டம்பர் மாதத்திற்கான பௌர்ணமி புரட்டாசி மாதத்தில் பிறக்கிறது. புரட்டாசி மாதம் பிறக்கும் செப்டம்பர் 17ம் தேதியே இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகிறது.  ஆனால், அந்த நாளில் காலை 11.22 மணிக்கு பௌர்ணமி திதி வருகிறது. பொதுவாக, ஒரு நாளில் சூரிய உதயத்தின்போது வரும்போது என்ன திதி உள்ளதோ, அதுவே அன்றைய நாளின் திதியாக இருக்கும்.

இதன்படி, புரட்டாசி பிறக்கும் நாளில் பௌர்ணமி திதி பிறந்தாலும் அதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 18ம் தேதியே பெளர்ணமி நாளாக கணக்கில் கொள்ளப்படும். ஆனால், பௌர்ணமி மட்டும் முழு நிலவை அடிப்படையாக கொண்டு கருதப்படுகிறது. இதன்படி பார்க்கும்போது முழு நிலவும், பௌர்ணமி திதியும் வரும் 17ம் தேதி இரவு முழு நிலவு சேர்ந்து இருக்கும். வரும் செப்டம்பர் 18ம் தேதி காலை 9.10 மணிக்கு பௌர்ணமி திதி நிறைவடைகிறது.

கிரிவலம் செல்லும் நேரம்:

பொதுவாக, பௌர்ணமி நன்னாள் என்றாலே சிவபெருமானுக்கு உகந்த திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல விரும்பும் பக்தர்கள்  வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் காலை 11.44 மணி முதல் அடுத்த நாளான செப்டம்பர் 18ம் தேதி காலை 8.04 வரை கிரிவலம் செல்லலாம். இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பௌர்ணமியில் பல நல்ல காரியங்களையும் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மட்டுமின்றி மற்ற கோயில்களிலும் பௌர்ணமி நன்னாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.

Continues below advertisement