இந்தியாவைப் பொறுத்தமட்டில் செய்யும் தொழிலை ஒவ்வொருவரும் உயர்வாக கருதுகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் தொழிலை உயர்வாக கருதுகின்றனர். இதை உணர்த்தும் விதமாகவே செய்யும் தாெழிலே தெய்வம் என்று பழமொழி உள்ளது. 

இந்த தொழிலை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை நாளை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக பழங்கள், பூக்கள், காய்கறிகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மேலும், ஆயுதபூஜையை கொண்டாடும் விதமாக பணிபுரியும் இடத்தை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், ஆயுதபூஜையை கொண்டாடும் விதமாக கீழே காணும் புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிருங்கள்.

செய்யும் தொழிலே தெய்வம்.. தெய்வம் தரும் பலனை செய்யும் தொழில் தரும்

வாழ்வின் வளத்தை பெருக்கும் தொழில்.. தொழிலின் பெருமையை போற்றும் ஆயுதபூஜை

செய்யும் தொழிலை வலுவாக்கு.. வாழ்வை வளமாக்கு.. 

சரஸ்வதியை போற்றுவாேம்... கல்விச் செல்வத்தை பெறுவோம்.

இனிய ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்... 

 

கல்வியின் அதிபதியை சரஸ்வதி பூஜை நன்னாளில் போற்றுவோம்.. 

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு புத்தங்கள், நோட்டுகள், பேனாக்கள் வைத்து வீடுகளில் சாமி தரிசனம் செய்யப்படுகிறது.

ஆயுத பூஜையை முன்னிட்டு தொழிற்கூடங்களிலும் சாமி தரிசனம் செய்யப்பட்டு வருகிறது.

வீடுகளில் செல்வம் பெருகிட இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்