சிறப்பு பூஜைகள்:
தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடி ஏற்றி வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவில் பூஜை மற்றும் பிரசாததிற்கான கட்டண விபரம்
S.no |
பூஜை/ பிரசாதம் |
விலை பட்டியல் |
1. |
நெய்அபிஷேகம்: 1 தேங்காய் |
ரூ. 10 |
2. |
அஷ்டாபிஷேகம் |
ரூ. 6,000 |
3. |
கணபதி ஹோமம் |
ரூ. 375 |
4. |
உஷ பூஜை |
ரூ. 1,500 |
5. |
நித்ய பூஜை |
ரூ. 4,000 |
6. |
பகவதி சேவை |
ரூ. 2,500 |
7. |
களபாபிஷேகம் |
ரூ. 38,400 |
8. |
படி பூஜை |
ரூ. 1,37,900 |
9. |
துலாபாரம் |
ரூ. 625 |
10. |
புஷ்பாபிஷேகம் |
ரூ. 12,500 |
11. |
அப்பம் (1 பாக்கெட்) |
ரூ. 45 |
12. |
அரவணை (1 டின்) |
ரூ. 100 |
13. |
விபூதி பிரசாதம் |
ரூ. 30 |
14. |
வெள்ளை நிவேத்தியம் |
ரூ. 25 |
15. |
சர்க்கரை பாயசம் |
ரூ. 25 |
16. |
பஞ்சாமிர்தம் |
ரூ. 125 |
17. |
அபிஷேக நெய் (100 மிலி) |
ரூ. 100 |
18. |
நவக்கிரக பூஜை |
ரூ. 450 |
19. |
ஒற்றைகிரக பூஜை |
ரூ. 100 |
20. |
மாலை/வடி பூஜை |
ரூ. 25 |
21. |
நெல்பறை |
ரூ. 200 |
22. |
மஞ்சள் பறை |
ரூ. 400 |
23. |
தங்க அங்கி சார்த்தி பூஜை |
ரூ. 15,000 |
24. |
நீராஞ்சனம் |
ரூ. 125 |
25. |
இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை |
ரூ. 300 |