மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி

Continues below advertisement




 


மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நடைபெற்று வரும் உற்சவர் திருவீதி உலாவில் சுவாமி நேற்று வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.


கரூர் நகரப் பகுதிகளில் குடிகொண்டு அருள் பாதித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இன்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி அபய பிரதான ரங்கநாதர் வெண்ணெய்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க சுவாமியின் திருவீதி உலா ஆலயம் வலம் வந்தன.


பின்னர் ஆண்டாள் சன்னதி அருகே மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்று அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி இராப்பத்து நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆன்மீக ஸ்ரீ அபயப் பிரதான ரங்கநாத சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.




 


ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,ஸ்ரீ சவுந்தரனாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், அபிஷேக பொடி, எலுமிச்சை சாறு, அரிசி மாவு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, பக்தர்கள் வழங்கிய பல்வேறு வண்ண மாலைகள் அறிவித்த பிறகு வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது .




 


அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரனாகி  கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற  பிரதோஷ விழாவை காண கரூர் திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, வேடசந்தூர், மோகனூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.