தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமான நடிகரான அஜித் குமார் தற்போது "துணிவு" படத்தின் டப்பிங் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ள இந்த சமயத்தில் ஒரு முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. 


 



AK 62 ஹீரோயின் யார் ?


நடிகர் அஜித் குமார் - இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் முதன் முறையாக உருவாக இருக்கும் AK 62 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜனவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் ஹீரோயின் குறித்த சில குழப்பங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. AK 62 திரைப்படத்தில் அஜித் ஜோடியாக மீண்டும் இணையவுள்ளார் பிரபலமான நடிகை த்ரிஷா கிருஷ்ணன் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி இது மட்டும் உறுதியாகிவிட்டால் அஜித் - திரிஷா ஜோடி சேரும் ஐந்தாவது திரைப்படம் இதுவாகும்.


முதலில் அஜித் ஜோடியாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மனைவி மற்றும் நடிகையான நயன்தாரா நடிப்பார் என கிசுகிசு வெளியானது. இருப்பினும் நடிகர் அஜித் குமாருடன் நடிகை திரிஷா இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது. அந்த தகவல் உண்மையானால் விரைவில் இந்த அழகிய ஜோடியை மீண்டும் நாம் திரையில் காண வாய்ப்பு கிடைக்கும். 







ஐந்தாவது முறையாக அஜித் - திரிஷா ஜோடி :


தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒன்று அஜித் குமார் - த்ரிஷா கிருஷ்ணன் ஜோடி. ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் திரைப்படங்களை தொடர்ந்து ஐந்தாவது திரைப்படமாக அமையுமா AK 62 என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 






ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் :


AK 62 திரைப்படம் வழக்கமான விக்னேஷ் சிவன் படங்களை போல நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் நடிகர்கள் சிலர் இப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கவுள்ளார்.