திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27ம்தேதி நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சென்று பழனி கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
படிப்பாதை வழியாக மலை மீது சென்ற அமைச்சர் சேகர்பாபு படிப்பாதையில் உள்ள கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மலை மீது அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரம் திருப்பணிகளையும், குடமுழுக்கு ஏற்பாடுகளையும் அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் குடமுழுக்கு விழாவிற்காக மலை மீது அமைக்கப்பட்டுள்ள யாகசாலைகள் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்