தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயில்  உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் உண்டியல் காணிக்கையில் முதல் இடம் பிடிக்கும் இக்கோயில் உலக புகழ்பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


16 வருடங்களுக்கு பிறகு பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தேதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!




பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.


Omni Bus : அடேங்கப்பா... இதுதான் சாக்கா..? தங்க விலையை ஓவர்டேக் செய்யும் ஆம்னி பேருந்து கட்டணங்கள்! அதிர்ச்சியில் பயணிகள்!


இந்த நிலையில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மலைக்கோயில் மேல்பிரகாரத்தில் உள்ள பாறைவேல் மண்டபம் மற்றும் கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது.




இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று முகூர்த்தக்கால் ஊன்றினர். தொடர்ந்து பழனி மலைக்கோயில் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள், தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு, 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்பு கம்பிகள், மடக்குகதவுகள், பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டது.


“நலமாக இருக்கிறேன்; எனக்கு எந்த காயமும் இல்லை; காருக்குதான்...” - ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!




Crime: கார் டிரைவருடன் கனெக்‌ஷன்.. காதலுக்கு தடையாக இருந்த கணவர்: கூலிப்படையை வைத்து கொலை செய்த பெண் எஸ்.எஸ்.ஐ!


முன்னதாக பழனி திருக்கோயிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையை அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண