அக்டோபர் மாதம் அடுத்த வாரம் செவ்வாய் கிழமை பிறக்கிறது. இந்த வருடத்தில் 8 மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில், 9வது மாதமாக அக்டோபர் பிறக்கிறது.
அக்டோபர் மாதத்தில் என்னென்ன விசேஷம்?
அக்டோபர் மாதத்தில் எந்தெந்த நாளில் என்னென்ன விசேஷம் என்பதை கீழே விரிவாக காணலாம்.
- அக்டோபர் 1ம் தேதி – முதியோர் தினம் – செவ்வாய்கிழமை
- அக்டோபர் 2ம் தேதி – அமாவாசை, காந்தி ஜெயந்தி – புதன்கிழமை
- அக்டோபர் 3ம் தேதி – நவராத்திரி பூஜை ஆரம்பம் – வியாழன்
- அக்டோபர் 4ம் தேதி – சந்திர தரிசனம் – வெள்ளி
- அக்டோபர் 6ம் தேதி – சதுர்த்தி விரதம் – ஞாயிறு
- அக்டோபர் 7ம் தேதி – சோமவார விரதம், லலிதா பஞ்சமி – திங்கள்
- அக்டோபர் 9ம் தேதி – துர்கா பூஜை, சஷ்டி விரதம் – புதன்கிழமை
- அக்டோபர் 11ம் தேதி – மகா நவமி, துர்காஷ்டமி, ஆயுதபூஜை – வெள்ளி
- அக்டோபர் 12ம் தேதி – விஜயதசமி, திருவோண விரதம் – சனிக்கிழமை
- அக்டோபர் 13ம் தேதி – ஏகாதசி விரதம், வித்யாரம்பம் – ஞாயிறு
- அக்டோபர் 15ம் தேதி – பிரதோஷம் – செவ்வாய்
- அக்டோபர் 17ம் தேதி – பௌர்ணமி, சபரிமலை நடை திறப்பு – வியாழன்
- அக்டோபர் 19ம் தேதி – கார்த்திகை விரதம் – சனிக்கிழமை
- அக்டோபர் 20ம் தேதி – சங்கடஹர சதுர்த்தி – ஞாயிறு
- அக்டோபர் 21ம் தேதி – காரக சதுர்த்தி – திங்கள்
- அக்டோபர் 28ம் தேதி – ஏகாதசி விரதம் – திங்கள்
- அக்டோபர் 29ம் தேதி – பிரதோஷம், தன த்ரயோதசி – செவ்வாய்
- அக்டோபர் 30ம் தேதி – மாத சிவராத்திரி – புதன்
- அக்டோபர் 31ம் தேதி – தீபாவளி – செவ்வாய்
முக்கிய பண்டிகைகள்:
வரும் மாதத்தில் முக்கிய பண்டிகையாக காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி ஆகியவை உள்ளது. தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றம் விஜயதசமி பண்டிகை பெரியளவில் கொண்டாடப்படும் சூழலில், வட இந்தியாவில் நவராத்திரி பூஜை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.