ஆங்கிலப் புத்தாண்டு வருவதற்கு இன்று சில நாட்களே உள்ளன. வரும் ஆண்டும் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திக்க தவறுவதில்லை. 


நகரங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலானவர்கள் தொலைக்காட்சியை பார்த்தும், திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களை பார்த்தும் கொண்டாடுவது உண்டு. ஆனால், இதற்கெல்லாம் முன்பாக கோயில்களுக்கு சென்று சுவாமியை வழிபடுவதும் காலந்தோறும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. புத்தாண்டுக்கு தமிழகத்தில் செல்ல வேண்டிய கோயில்களில் பட்டியலை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல புகழ்பெற்ற கோயில்கள் இருக்கின்றன.


இருப்பினும், அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வரும் கோயிலாக வடபழனி முருகன் கோயிலை கூறலாம்.


வடபழனி முருகன் கோயில்


வடபழனி ஆண்டவர் கோயில் என்பது சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகஇக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. திரையுலகினர் அதிகம் வசிக்கும் கோடம்பாக்கம் பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளதாலும் தமிழ் திரைப்படத்துறையினர் வருகை அதிகமிருக்கும். சென்னைவாசிகளிடையே பிரபலமான கோவிலாக உள்ளது இந்த முருகன் கோவில். காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஏகம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன.


இந்தக் கோயில்கள் எங்கு வேண்டுமானாலும் புத்தாண்டு அன்று சென்று வழிபடலாம். அனைத்து கோயில்களுமே வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களாக திகழ்கின்றன. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்.


பூலோக வைகுண்டம்


திருவரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. 


தஞ்சை பெரிய கோயில்
இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை புத்தாண்டுக்கு சென்று வழிபடலாம்.


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்  என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இந்த கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.


வேலூர் பொற்கோயில்
பொற்கோயில் இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி (அல்லது மலைக்கோடி) எனப்படும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இதுதவிர கும்பகோணத்தை சுற்று நவகிரக கோயில்கள் உள்ளன. சிதம்பரம் நடராஜர், வைத்தீஸ்வரன் கோயில், விழுப்புரம் மாவட்டத்தில் பல கோயில்கள் உள்ளன.


22வது திவ்ய தேசமா? 23 -வது திவ்ய தேசமா? மயிலாடுதுறையில் பக்தர்கள் குழப்பம்!


வசதி இருக்கும்பட்சத்தில் ரயில், பேருந்து மூலம் இந்தக் கோயில்களுக்கு சென்று புத்தாண்டு அன்று வழிபடலாம். இல்லையெனில், உங்கள் ஊரில் உள்ள கோயில்களுக்கு சென்றும் வழிபட்டு புதிய ஆண்டை தொடங்கலாம்.