மயிலாடுதுறை மாவட்டம்  திருஇந்தளூரில் (திருவிழந்தூர்) பிரசித்திபெற்ற பரிமளரங்கநாதர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 22 -வது ஸ்தலமாகவும். பஞ்சரங்க தலங்களுள் ஐந்தாவது அரங்கம் (பரிமளரங்கம்) விளங்கி வருகிறது. பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 




இக்கோயிலில் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவம் ஆகியவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பரிமளரெங்கநாதர் பெருமாள் கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகே நெடுஞ்சாலைத்துறை மூலம் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் திருஇந்தளூர் அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயில் திவ்ய தேசம் 22 -வது திவ்யதேசம் என்பதற்கு பதிலாக 23 வது திவ்ய தேசம் என்று  நெடுஞ்சாலைத்துறையினர் பெயர் பலகையில் எழுதிவைத்துள்ளனர்.




இக்கோயிலுக்கு வரும் பல பக்தர்கள் திவ்ய தேசம் 22 -வது திவ்ய தேசமா, 23 -வது திவ்யதேசமாக என்ற குழப்பம் ஏற்பட்டு கோயில் வழிபாடு செய்யும்போது பட்டாச்சாரியார்களிடம் விபரங்களை கேட்டு தங்கள் குழப்பத்தை தெளிவுப்படுத்திகொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த பெயர் பலகையில் திருஇந்தளுர் பகுதியில் 2 இடங்களில் வைத்துள்ளனர். அதில் ஒன்றில் 23 -வது திவ்யதேசம் என்றும். மற்றொன்றில் 22வது திவ்யதேசம் என்று எழுதிவைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் குழப்பம் ஏற்படுகிறது. அதனை தவிர்க்க கோயில்களின் பெயர் மற்றும் விபரங்களை எழுதும்போது நெடுஞ்சாலைத்துறையினர் சரியாக கவனித்து எழுத வேண்டுமென்றும், திருஇந்தளுர் பரிமளரங்கநாதர் கோயில் பெயர் பலகையில் 22 -வது திவ்ய தேசம் என்று திருத்தம் செய்ய வேண்டுமென்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




மயிலாடுதுறை ஐயப்பன் ஆலயத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டு 38-ம் ஆண்டு மண்டல பூஜையின் மகா அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு  தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வியாபாரி செட்டி தெருவில்  சுவாமி ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 -வது ஆண்டாக மண்டல பூஜைவிழா நடைபெற்றது.  நேற்று 508 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. சுமார் பதினைந்து அடி உயரத்தில் செயற்கையாக, 18 படிகள் அமைக்கப்பட்டு சுவாமி ஐயப்பனின் பஞ்சலோகத் திருமேனி வைக்கப்பட்டு படிபூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா அபிஷேகம் இன்று கைலாய வாத்தியங்கள் இசைக்க நடைபெற்றது. 




பக்தர்கள் வழங்கிய மஞ்சளால் ஐய்யப்பன் திருமேனி மஞ்சள் காப்பு செய்யப்பட்டு ஐய்யன் அருளைபெற சுப்ரபாத அபிஷேகம் செய்யப்பட்டது. தொடாந்து திரவியம், அரிசிமாவு, வாழைப்பழம், மாம்பழம், பழாச்சோலை, பஞ்சாமிர்தம், தேன், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால்  அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஐய்யப்பன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  மகா தீபாரதனை நடைபெற்றது. குருசாமி தமிழரசன் செய்வித்த பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.