அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் பத்ர தீபத் திருவிழா. தீப ஒளியில் கோயில் வளாகம் முழுவதும் ஜொலித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தாிசனம்.




தென் மாவட்டங்களில் புராதனமான சிறப்புமிக்க நெல்லையப்பர் திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. சிறப்புகள் வாய்ந்த அருள்மிகு காந்திமதி உடனுறை நெல்லையப்பா் திருக்கோவிலில் தை அம்மாவாசையை முன்னிட்டு பத்ரதீபத் திருவிழா கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகின்றது. நெல்லையப்பர் சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தை அம்மாவாசையை முன்னிட்டு திருக்கோவில் சாயசரட்சை பூஜை முடிந்ததும் மணி மண்டபத்தில் ஏற்றப்பட்ட தங்க விளக்கிற்கு அா்ச்சனை, ஆரத்தி நடைபெற்றது.




பின்னர் சிவாச்சாரியார்கள் தங்க விளக்கினை ஊர்வலமாக நெல்லையப்பர் மூலஸ்தானத்திற்கு எடுத்துச் சென்றனர் அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு அதிலிருந்து தீபம் திரு விளக்கின் மூலம் கொண்டுவரப்பட்டு சுவாமி கோவில் தங்க கொடிமரம் முன்பு அமைந்துள்ள விளக்கில் நந்தி தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் சுவாமி கோயில், ஸ்ரீகாந்திமதி அம்பாள் கோயில் ஸ்ரீஆறுமுகநயினார் திருக்கோயில்களில் அமைந்துள்ள உள்சன்னதி மற்றும் வெளிப் பிரகாரங்கள் என திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அகல் விளக்குகளை வரிசையாகவும், பல வடிவங்களிலும் ஏற்றி வைத்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே தீபஒளியில் ஜொலித்தது. இரவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும் 63 நாயன்மார்கள் மரகேடயத்திலும் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாத்தினா் செய்திருந்தனா்.




திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். இறைவன் பெயர் - நெல்லையப்பர் இறைவி பெயர் - காந்திமதி அம்மை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும்.




கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் "திருநெல்வேலிப் பதிகம்" பாடியிருப்பதால் அதற்கு முன்பே "திருநெல்வேலி" என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.