கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் மாரியம்மன் லட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார்.


 




நவராத்திரி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாளை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆலய மண்டபத்தில் மாரியம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து லட்சுமி அலங்கார செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் பூசாரி மாரியம்மனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.  சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி பஜனை பாடல் பாடியபடி நவராத்திரி இரண்டாம் நாள் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் முருகன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.


 




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு நாள்தோறும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரி இரண்டாம் நாளான அம்பிகைக்கு முருகன் அலங்காரம் செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் பஜனை பாடியபடி சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.


 




அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு சிறப்பித்தனர். கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி இரண்டாம் நாள் முருகன் அலங்கார நிகழ்ச்சியை காண பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.