Navratri 2023 : நவராத்திரி விழாவால் கோலாகலமாக காட்சி அளிக்கும் காஞ்சிபுரம்..! பக்தி வெள்ளத்தில் பக்த கோடிகள்..!

Navratri 2023 Celebration : " மூன்றாம் நாள் ஸ்ரீ அமிருதவல்லி தாயார் ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் திவ்ய அலங்காரத்தில் கண்ணாடி அறையில் எழுந்தருளினார் "

Continues below advertisement
பெரிய காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் கோவிலில் பச்சையம்மன் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார் ஏராளமான சுவாமி தரிசனம் சிறுவர்கள் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. காந்தி சாலை முத்தீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு குங்கும அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீவிரதையின் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
 

நவராத்திரி 2023: 

Continues below advertisement


இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி(Navratri) பண்டிகையும் ஒன்றாகும். நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நவம் என்பதற்கு ஒன்பது என்று பொருள் ஆகும். துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளும் சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும். 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை மூன்று, மூன்று நாட்களாக பிரித்து 3 தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.


அம்மன் கோவில்களில் விசேஷம்

அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. செல்வத்தை தரும் லட்சுமி தேவியின் ஆட்சிக்காலம் இதுவாகும். கடைசி 3 நாட்கள் கல்விச்செல்வத்தின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கான வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்வது வழக்கம் தான். கொலு வைத்தவர்கள், கொலு வைக்காதவர்கள் என்று வெவ்வேறு வகையில் நவராத்திரியை கொண்டாடினாலும் பல பெண்கள் நவராத்திரிக்கு விரதம் இருப்பார்கள். ஒரு சில  பெண்கள் 9 நாட்களும் விரதம் இருந்து பூஜை செய்து, அம்பாளை வழிபடுவார்கள்.


தாய் படவேட்டம்மன்
 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐயப்பன் நகரில் உள்ள தாய் படவேட்டம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு நவராத்திரி உற்சவம் கடந்த சனி கிழமை முதல் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் படவேட்டம்மன் பல்வேறு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 

நவராத்திரியில் 3ஆம் நாளான இன்று தாய் படவேட்டம்மன் அன்னபூரணி கோலத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவில் தர்மகத்தா சார்பில் விழா குழுவினர்கள் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
முத்தீஸ்வரர் கோவில்
 
பெரிய காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் கோவிலில் பச்சையம்மன் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார் ஏராளமான சுவாமி தரிசனம் சிறுமிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. காந்தி சாலை முத்தீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு குங்கும அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீவிரதையின் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

 
திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள்
 
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாள்  ஸ்ரீ அமிருதவல்லி தாயார்  ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி  நாச்சியாருடன்  திவ்ய அலங்காரத்தில் கண்ணாடி அறையில் எழுந்தருளினார்.  இதனைத் தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு   சுவாமியை தரிசனம் செய்தனர்.
Continues below advertisement
Sponsored Links by Taboola