பிரசித்தி பெற்ற நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்ட விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான நாகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இராகு கேது பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தின் 27ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து தியாகேசப் பெருமாள் வசந்த மண்டபம் எழுந்தருளி குதிரை வாகனத்தில் வீதி உலாவும், மின் அலங்கார ஓலச் சப்பரத்தில் ரிஷபம் வாகன காசி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.



 

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோடடம் நேற்று நடைபெற்றது. திருத்தேரில் திருநாகவள்ளிஅம்மாள்  சமேத நாகநாதசுவாமிகள் எழுந்தருளியதும், மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சிவ வாத்தியம், கேரள மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், திருத்தேரோட்டத்தையொட்டி நாகையில் இருந்து நாகூர் வழியாக காரைக்கால் மற்றும் கும்பகோனம் செல்லும் பேருந்துகள் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டன.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.