பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் ( Poornami is the best time to go to Krivalam) 


திருவண்ணாமலை (Tiruvannamalai News) பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும். கோவிலுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று அஷ்ட லிங்கங்களையும் வழிபடுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலையில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அதன்படி பௌர்ணமி 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது.


வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என அழைக்கப்படுகிறது. எனவே, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த ஆண்டுதான் முதன்முறையாக குரு பௌர்ணமி என பக்தர்களிடம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


 




 


 குரு பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்


இதில், திருவண்ணாமலையில் குரு பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கத்தைவிட கூடுதலான சிறப்பு பேருந்துகள் இயக்கவும், அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, தரிசன வரிசையை முறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


சிறப்பு ரயில்கள், ஏற்பாடுகள்:


அதன்படி, பொது தரிசன வரிசையை ராஜ கோபுரம் வழியாக அனுமதித்து, திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் கட்டண தரிசனத்தை பௌர்ணமி நாளில் ரத்து செய்யவும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், ஒற்றை தரிசன வரிசையை ஏற்படுத்த பரிசோதனை முயற்சியை இந்த முறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதோடு, இந்த பௌர்ணமியில் இருந்து முதன்முறையாக பௌர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன்படி, நாளை (2ம் தேதி) இரவு 9.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.


 




 


 குரு பௌர்ணமி சிறப்பு ரயில்கள் நேரம் பட்டியல் ( Guru Poornami Special Trains Time List )


அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (3ம் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, காலை 5.35 மணிக்கு வேலூர் கண்ட்டோன்மென்ட் சென்றடையும். அதேபோல், விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும். அதைத்தொடர்ந்து, நண்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மேலும், விழுப்புரத்தில் நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.


பிறகு, 3ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்நிலையில், வேலூர் கண்ட்டோன்மென்ட் செல்லும் சிறப்பு ரயில், அங்கிருந்து தொடர்ச்சியாக சென்னை பீச் ஸ்டேஷன் வரை செல்லவும், விழுப்புரம் வரை செல்லும் சிறப்பு ரயில், அங்கிருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.