திருமணத்தடை நிவர்த்தி நீக்கும் திருமருகல் பிரசித்தி பெற்ற ஆமோதளநாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம், ஆட்சியர், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற ஆமோதனநாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் சுவாமி திருக்கோவில் உள்ளது. திருமணத்தடை நிவர்த்தி நீக்கும் இக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 23ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஆறாம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை முடிவுற்றதை தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் சிவ வாத்தியம் மற்றும் மல்லாரி ராகம் முழங்க புனித நீரானது கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது.




அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீரானது கலசங்களில் ஊற்றப்பட்டு, இரத்தினகிரிஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


திருமருகல் ஆமோதளநாயகி சமேத ரத்னகிரீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியானந்தா சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.