உசிலம்பட்டி அருகே 18 கிராம மக்கள் கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா - பிரச்னைக்குரிய உத்தப்புரம் கிராமத்தில் மட்டும் திருவிழா நடத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


திருவிழா - இரு நாட்கள் டாஸ்மார்க் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு.திருவிழாவில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில் 1300 போலிசார் குவிக்கப்பட்டுள்ளன.


எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா:


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 18 கிராமங்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா இன்றும் மற்றும் நாளையும் கொண்டாப்பட உள்ளது. இந்த திருவிழாவிற்காக 18  கிராமங்களிலிருந்து சிலை எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த 18 கிராமங்களில் ஒரு கிராமமான உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் சிலை எடுத்து கொண்டாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2015 முதல் இந்த கிராமத்தில் கோயில் திருவிழா நடத்தப்படாமல் உள்ளது.


மேலும் உசிலம்பட்டி தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை பகுதியில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு




தற்போது வரை நீதிமன்றம் வரை சென்று கோவிலில் சிலை எடுத்து திருவிழா நடத்த அனுமதி கோரியுள்ள சூழலில் அடுத்த மாதம் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் உத்தப்புரம் கிராமத்தில் மட்டும் சிலை எடுத்து கோவில் திருவிழா நடத்த அனுமதி இல்லை எனவும், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவை உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.




டாஸ்மாக் கடைகள் மற்றும் ஏசி பாரையும் மூட உத்தரவு:


இந்த திருவிழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு காரணமாக எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள உத்தப்புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி விலக்கு, எம்.கல்லுப்பட்டி மற்றும் துள்ளுக்குட்டிநாயக்கணூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 டாஸ்மாக் கடைகள் மற்றும் எழுமலையில் உள்ள ஒரு தனியார் ஏசி பார்-யையும் இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் மூட மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.




போலீஸ் தீவிர பாதுகாப்பு


மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் கோவில் திருவிழா நடைபெறும் 18 கிராமங்களிலும் 3 ஏடிஎஸ்பி-க்கள், 8 டிஎஸ்பி-க்கள் மேற்பார்வையில் 1300 போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இக்கிராமத்தில் நேற்று ( 23.10.2023 ) பிற்பகல் 2 மணியிலிருந்து வரும் 26.10.2023 ஆம் தேதி இரவு 8 மணி வரை 144 தடை உத்தரவு இருக்கும் எனவும், தனிநபர்கள் கூட்டமாக கூடவோ, வெளி வாகனங்களில் நபர்கள் வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள் படிக்க - Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Arrest : ‘ஹோட்டல் ஊழியர் போல பதுங்கியிருந்த பயங்கரவாதி?’ தேனியில் அதிரடி கைது..!