உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

 

3000 ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து கிடைத்து வருவதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.,

 

பழமையான பாறை ஓவியங்கள்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையில் ஏ.இராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி செல்லும் சாலையின் உச்சியில் 200 அடி உயரத்தில் அமைந்துள்ள நரிப்பள்ளி புடவு என்று சொல்லக்கூடிய புடவு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த பாறை ஓவியங்களில் சில 3000 ஆண்டுகள் பழமையானதாகவும், அடுத்தடுத்த காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த வேட்டை சார்ந்த சமுகத்தினரின் ஓவியங்களும் இந்த புடவு பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.,

 





 

குறிப்பாக ஆண், பெண் இனச் சேர்க்கை குறித்த பாறை ஓவியம் இந்த புடவு பகுதியில் காணப்படுவதாகவும், இது போன்ற ஆண், பெண் இனச் சேர்க்கை குறித்த பாறை ஓவியங்கள் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என இரு இடங்களில் மட்டுமே காணப்பட்ட நிலையில் மூன்றாவதாக இந்த ஓவியம் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்தாக காணப்படுகிறது என்றும்.,



 

இதே புத்தூர் மலையின் தென் பகுதியில் ஏற்கனவே இரு பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மலை அடிவாரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தமிழி எழுத்துக்கள் கொண்ட கல் கண்டறியப்பட்டுள்ள சூழலில் இப்பகுதியில் 3000 ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்த்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து கிடைத்து வருவதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.