தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்தது இந்த கோவில். இக்கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும்  இருக்கக் கூடாது என கூறப்படுகிறது.




இந்த கோவில் கருவறைக்குள் இதுவரை யாரும் சென்றதில்லை எனவும், கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.




இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக ஸ்தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசித்திபெற்று விளங்குகிறது.




காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா வரும்  மார்ச் மாதம் 08ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதே போன்று அடைத்த கதவுக்கே இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றது. 


Congress: காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கிய வருமானவரித்துறை; ராகுல் காந்தி கண்டனம்


இந்நிலையில் இந்த வருடம் மாசித் திருவிழாவிற்காக பரம்பரை காவல்காரர்கள் வெட்டி கொண்டு வரப்பட்ட 80 அடி உயரமுள்ள மூங்கில் மரத்தில் மஞ்சள் நிற கொடி கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் மூங்கில் கொடிமரம் ஊண்டப்பட்டு கொடியேற்றும் வைபவம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்சியில்  பக்தர்கள் கலந்து கோண்டு சாமி தரிசம் செய்து விரதத்திற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.