நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாம் ஆண்டு திருப்போரூர் ஆதி திராவிடர் குடியிருப்பு மக்கள் வசிக்கும் பகுதிக்கு முருகர் தேர் செல்வது சம்பந்தமாக அனைத்து சமூகத்தினர் சமாதான கூட்டம் மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையில் திருப்போரூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

 

திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் ( thiruporur kandaswamy temple )

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய  நிகழ்வாக கிருத்திகை, தேர்த்திருவிழா, தெப்ப திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.

 



 

திருத்தேர் திருவிழாவின் மறுநாள் 22 ஆம் தேதி பரிவேட்டை உற்சவம்  ஆலத்தூர் கிராம பகுதிக்கு இரவு நேரத்தில் நடைபெறும். அந்த பரிவேட்டை நிகழ்வு அடுத்த நாள் ஆலத்தூரில் இருந்து முருகப்பெருமான் தண்டலம், மேட்டு தண்டலம் உள்ளிட்ட இடங்களில் அருள் பலித்து இறுதியாக 23ஆம் தேதி   திருப்போரூர் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வசிக்கும் படவட்டம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு 400ஆண்டுகளுக்கு பிறகு  நீதிமன்ற உத்தரவின் படி இரண்டாம் ஆண்டாக செல்ல உள்ளது.



 

கடந்த ஆண்டு முருகர் உற்சவம் தேர் திருவிழா ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400 ஆண்டுகளுக்கு பிறகு சென்றது பின்னர் அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடி முருகப் பெருமானை வழிபாடு செய்தனர்.

 



 

அதேபோன்று இந்த ஆண்டும் வரும் 23ஆம் தேதி ஆதிதிராவிடர் வசிக்கும் படவேட்டம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் வசிக்கும்  இடத்திற்கு முருகப்பெருமான் தேர்வு செல்வதை பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம். அரியரை வழங்கியது அதன் அடிப்படையில் இன்று மாமல்லபுரம் டிஎஸ்பி ரவிஅபிராம் தலைமையில்  அனைத்து சமூகத்தினர் ஆலோசனைக் கூட்டம்  திருப்போரூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஆலத்தூர் தண்டலம் பூந்தண்டலம் திருப்போரூர் மற்றும் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் பங்கேற்றனர்.

 



 

இதில் கடந்த ஆண்டு நீதிமன்ற உத்திரப்படி படவேட்டம்மன் கோவில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் தேர் வீதிஉலா வந்தது. அதில் ஒரு சில சலசலப்பு ஏற்பட்டது.  இந்தாண்டு அப்பகுதிக்கு  சுமூகமாக சென்று, அப்பகுதி மக்கள் வழிபாடு செய்த பின் மீண்டும் கோவில் வந்தடையும் வரை அனைத்து சமூக மக்களிடம் சம்பந்தமான  சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் அன்றைய தினம் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.