மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் ஆலயம் உள்ளது. பழமையும் பிரசித்தியும் பெற்ற இவ்வாலயத்தில் உள்ள கோபாலகிருஷ்ண பெருமாளை வேண்டி பிராத்திப்பவர்களுக்கு திருமணத்தடை, தம்பதிக்குள் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், வம்சவிருத்தி, செல்வ வளம் உள்ளிட்ட பல வரன்களை அள்ளி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதுபோன்ற பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தின் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் விழா செய்ய பக்தர்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுடன் அவர்களுடன் இணைந்து கோயில் கும்பாபிஷேக பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி திருப்பணி பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
சிற்பங்கள் சீர் செய்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறித்தனர். அதனை அடுத்து கும்பாபிஷேக தினமான இன்று வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவிற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நான்காம் காலயாக சாலை பூஜையில் பூர்ணாகுதி செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கும்பத்தை அடைந்தது.
விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓத கலசத்தில் புனித நீர் உற்றி பட்டாச்சியர்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை தரிசனம் செய்தனர்.
Hyderabad: ஹைதராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்