ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார். காமெடி டெம்பிளேட் படங்களில் நடித்துவந்த இவர், சீரியஸான கதைக்கொண்ட படங்களிலும் களம் கண்டார்.

Continues below advertisement

தற்போது, உதயநிதி, மாறன் இயக்கத்தில் “கண்னை நம்பாதே” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு விக்ரம் வேதா இசை புகழ் சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இதில், நடிகை ஆத்மிகா, நடிகை பூமிகா, நடிகர் சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள கண்ணை நம்பாதே படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள், ட்விட்டர் பக்கத்தில் பல விதமான கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Continues below advertisement

இது ஒரு சிறப்பான க்ரைம் திரில்லர் படம், இதன் திரைக்கதை இதன் மற்றொரு ப்ளஸ் ஆகும். மற்ற நடிகர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நியாமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆழமான திரைக்கதையை கொண்ட இப்படத்தில், எதிர்பாராத திருப்புமுனைகள் ஆங்காங்கே வருகிறது. நல்ல கதையை உதயநிதி தேர்வு செய்துள்ளார். துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர் என விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.