1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா.. ஊர்வலத்துடன் வந்த யானைகள்

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு யாகசாலை பிரவேசம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு யானைகள் மூலம் புனிதநீர் கொண்டு வந்து யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. 

Continues below advertisement

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, வழுவூரில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற வீரட்டேஸ்வரர் ஆலயம். இவ்வாலயத்தில் மகா கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பிரவேச நிகழ்ச்சியும், மூன்று யானைகள் அலங்கரித்து புனித நீர் கடங்களுடன் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது.

Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!


ஆலயத்தின் சிறப்பு

வீரட்டேஸ்வரர் ஆலயம், கீர்த்திவாசன் சுவாமி ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானை வடிவிலான அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்து, அந்த யானையின் தோலைத் தனது இடுப்பில் ஆடையாக அணிந்ததாக ஆலயப் புராண வரலாறு கூறுகிறது. தேவாரப் பாடல்களிலும், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களிலும் இந்த ஆலயம் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.

யாகசாலை பிரவேச நிகழ்ச்சி

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பிரவேச நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக, கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மூன்று யானைகளின் மீது வைக்கப்பட்டு, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. முன்னதாக, பசு, குதிரை, யானை ஆகியவற்றுக்கு முறையே கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றன.

Jana Nayagan: அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...


முளைப்பாரி ஊர்வலம்

யாகசாலை பிரவேச நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்தனர். சிவ வாத்தியங்கள் முழங்க, ஆலயத்தைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளிலும் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

பக்தர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் குப்பைக்கும் வரி – வருகிறது புதிய விதி! என்ன அளவுகோல் தெரியுமா?


ஆலய வரலாறு

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம், சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலயம், பல நூற்றாண்டுகளாக பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில், சிவபெருமான் வீரட்டேஸ்வரராகவும், பார்வதி தேவி பால குஜாம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். மேலும், விநாயகர், முருகன், நந்தி, பைரவர் உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகளும் உள்ளன.

கும்பாபிஷேக ஏற்பாடுகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆலய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது. யாகசாலை அமைக்கும் பணிகள், கலசங்கள் தயார் செய்யும் பணிகள், அலங்காரப் பணிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள, ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வழுவூர் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola