தருமபுரத்தில் உள்ள பள்ளியில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். 


பொதுத்தேர்வு 


தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் முதல் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதற்காக மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என தீவிரமாக அதற்கான செயல்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர். 



இந்த காலத்தில் இப்படி பட்ட பிள்ளைகளா..!! பெற்றோர்களுக்கு பாத பூஜை! ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கிய மாணவர்கள்...!


தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பள்ளி 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமா ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 12 வகுப்பு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகள் பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோர் ஆசீர்வாதங்களை பெறும் வகையில் ஆசிர்வாத திருநாள் விழா நடைபெற்றது. இந்த ஆசிர்வாத திருநாளை தொடர்ந்து 300 -க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாத பூஜை செய்தனர். 




ஆசிர்வாதம் செய்த ஆசிரியர்கள் 


அதனை அடுத்து தங்களுக்கு பாடம் கற்பிக்கும் குருவான வரிசையாக நின்ற அனைத்து ஆசிரியர்களின் கால்களில் விழ ஆசிரியர்கள் அனைவரும் மாணவ மாணவிகளுக்கு மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி தேவி படத்திற்கு திருக்கடையூர் ஆலய குருக்கள் மகேஷ் சிறப்பு பூஜைகளை செய்து மகா தீபாராதனை செய்த நிலையில், தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை கொடுத்து அருள் ஆசி வழங்கினார். அப்போது பள்ளி மாணவர்களின் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முத்தமிட்டு ஆசிர்வாதம் வழங்கி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இதையும் படிங்க: Dhinakaran speech : 2026 சட்டமன்ற தேர்தலில் முடிவுக்கு வரும்.. டிடிவி தினகரன் கூறியது என்ன ?




தேர்வு அட்டவணை 


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு


மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது முன்னதாக செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22 -ம் தேதி முதல் 28 -ம் தேதி வரை நடைபெறும். 2025 மார்ச் 28 -ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள் 2025 ஏப்ரல் 2 -ம் தேதி ஆங்கிலம், 2025 ஏப்ரல் 4-ம் தேதி விருப்ப மொழித் தேர்வு, 2025 ஏப்ரல் 7 -ம் தேதி கணிதம், 2025 ஏப்ரல் 11-ம் தேதி அறிவியல், 2025 ஏப்ரல் 15-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வு நடைபெறும். 2025 மே 19‌-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.




12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை


2025 மார்ச் 3 -ம் தேதி தொடங்கி மார்ச் 25 -ம் தேதி வரை 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. 2025 மார்ச் 3-ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களும், 2025 மார்ச் 6-ம் தேதி ஆங்கிலம், 2025 மார்ச் 11-ம் தேதி கணிதவியல், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், செவிலியர் (பொது) 2025 மார்ச் 14-ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சைன்ஸ், பொலிடிக்கல் சைன்ஸ், புள்ளியியல், நர்சிங் (வொகேஷனல்), பேசிக் எலக்ட்ரிக் இன்ஜினியரிங்


இதையும் படிங்க: அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!




2025 மார்ச் 18-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, பிசினஸ் மெத்தமேட்டிக்ஸ் அண்ட் ஸ்டேடிசிடிக்ஸ், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியங், பேசிக் சிவில் என்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் என்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் என்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆஃபிஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் செக்ரட்ரிஷிப், 2025 மார்ச் 21-ம் தேதி வேதியியல், கணக்குபதிவியல், ஜியோகிராஃபி 2025 மார்ச் 25 -ம் தேதி இயற்பியல், எக்னாமிக்ஸ், எம்ப்ளாயபிலிட்டி ஸ்கில்ஸ் செய்முறைத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 7-ம் தேதி முதல் 14 -ம் தேதி வரை நடைபெறும். மே 9 -ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.