கணவர் சிவனுக்காக பார்வதி தேவி நடத்திய கணு பொங்கல் வழிபாடு - எங்கே தெரியுமா?

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கணவர் சிவனுக்காக பார்வதி தேவி நடத்திய கணு பொங்கல் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.

Continues below advertisement

பிரசித்தி பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சுவாமிக்காக அம்பாள் கணு வைத்தல் என்ற சிறப்பு ஐதீக பூஜை நடைபெற்றது.

Continues below advertisement

பிரசித்தி பெற்ற சிவாலயம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்


மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு மற்றும் குறிப்பிட்ட சில அமாவாசை அன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். 

Israel Hamas Ceasefire Deal: அப்பாடா..! முடிவுக்கு வந்த 15 மாத காஸா போர், இஸ்ரேலும் ஹமாசும் ஒப்புதல்


கணு வைத்தல் நிகழ்வு 

இத்தகைய பிரசித்தி பெற்ற கோயிலில் பொங்கல் தினத்திற்கு மறுநாள் தனது கணவரான சிவபெருமான் நலமுடன் இருக்க பார்வதி தேவி கணு வைத்தல் என்ற சிறப்பு பூஜைகளை நடத்தியதாக ஐதீகம். அந்த ஐதீக நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் இந்த கணு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கானும் பொங்கலை முன்னிட்டு இந்தாண்டு கோயிலில் சந்திர தீர்த்தக்கரையில் கலசத்தில் சுக்கிரவார அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Toyota Land Cruiser Prado: என்னா லுக்கு..! வசதிகளுக்கு பஞ்சமில்லாத ஆஃப் ரோடர், டொயோட்டா லேண்ட் க்ரூசர் ப்ராடோ


பின்னர் குங்குமம் மஞ்சள் கலந்த அரிசியை பொங்கலிட்டு, செங்கரும்புடன் சௌபாக்கிய பொருட்களான மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு முதலியவற்றை வைத்து அம்பாளுக்கு நைவேத்தியம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை அம்பாளுக்கும் பின்னர் பூஜைகள் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புரோக்சனம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு சௌபாக்கியம் வேண்டி அம்பாளை பிரார்த்தித்தனர்.

Skoda Cars: கோடியாக், சூப்பர்ப், எல்ராக்.. அடுக்கடுக்காக கார்களை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா - என்னவெல்லாம் இருக்கு..!

Continues below advertisement
Sponsored Links by Taboola