திருமூலர் ஞானசமாதி அடைந்த தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ளது. திருமூலர் முர்த்தியடைந்த இடத்தில் அவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. திருமூலர் கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள படர்அரச மரத்தின்கீழ் தவமிருந்து 3000 பாடல்களை இயற்றினார். இந்த 3000 பாடல்களே திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது.




இந்நிலையில், திருமூலரின் குருபூஜை விழாவை முன்னிட்டு கோயிலின் தென்மூலையில் உள்ள திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, பசுக்களுக்கு கோபூஜை நடத்தப்பட்டது. விழாவில், அருள் அரசர்களும் அடியார்களும் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.




மயிலாடுதுறையில் காவிரியை மையமாக வைத்து நடைபெறும் துலா உற்சவத்தை முன்னிட்டு சிவ வைணவ சுவாமி வீதியுலா. காசி விஸ்வநாதர் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடனும் பரிமளரெங்கநாதர் அன்னவாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா!


மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் பிரசித்தி பெற்ற துலா உற்சவம் மயிலாடுதுறையிலு உள்ள பல்வேறு ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் இரவு நிகழ்ச்சியாக சிவ, வைணவ ஆலயங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மலைக்கோயில் ஶ்ரீகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் தெப்பக்குளம் ஶ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஶ்ரீகாசி விஸ்வநாதசுவாமி திருக்கோயில் சுவாமிகள் ஆலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பபஞ்சமூர்த்திகள் அலங்காரம் செய்யப்பட்டு மண்டப தீபாரதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமிகள் கோயிலில் இருந்து புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது. 




இதேபோல் சந்திர சாப விமோசனஸ்தலமான அருள்மிகு பரிமளரெங்கநாதர் திருக்கோயிலில் துலா உற்சவம் நேற்று கருடக்கொடி ஏற்றப்பட்டு விழா  துவங்கியது. இரவு பரிமளரெங்கநாதர் ஆண்டாள் அலங்காரத்தில் அன்னவானத்தில் எழுந்தருளி தீபாரதனை செய்யப்பட்டு தேரோடும் வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு கோயில்கள் கண்கவர் மின்னொளியில் அலங்கரிக்கபட்டு விழக்கொலம் பூண்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.




மயிலாடுதுறை வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயிலில் துலா உற்சவத்தின் இரண்டாம் திருநாளான இன்று கற்பக விருட்சம், காமதேனு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா புறப்பாடு!


மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் பிரசித்தி பெற்ற துலா உற்சவம் பல்வேறு ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை வள்ளலார் எனப்படும் வதான்யேஸ்வரர் சுவாமி கோயிலில் நேற்று துலா உற்சவம் ரிஷபக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் இரண்டாம் திருநாளான வதான்யேஸ்வரர் சுவாமி கற்பக விருட்சம் வாகனத்திலும், ஞானாம்பிகை அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருள செய்யப்பட்டனர். 




முன்னதாக சுவாமி அம்பாளுக்கு தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலின் உள்பிரகாரத்தில் விநாயகர் வீதி உலா செய்யப்பட்டு அங்கு யாகசாலை வளர்க்கப்பட்டு மகா பூர்ணாஹூதி மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி புறப்பாடு நடைபெற்றது. வீடெங்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.