மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் காவிரியில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. 




அந்த வகையில் இந்த ஆண்டு துலா உற்சவம் தமிழ் மாதம் ஐப்பசி 1-ம் தேதி அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சிவாலயங்களில் ரிஷபகொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. உற்சவத்தின முதல் திருநாளான நேற்று ஶ்ரீஞானாம்பிகை உடனாகிய ஶ்ரீவதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து விநாயகர், சோமாஸ்கந்தர், அம்பாள், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சன்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் காவிரி வடகரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதேபோல் மலைக்கோயில் காசிவிஸ்வநாதர், தெப்பகுளம் காசிவிஸ்வநாதர் ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி தென்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. 




இதில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள் ஶ்ரீமத் சிவகுருநாத கட்டளை தம்பிரான், சட்டநாத தம்பிரான், சுப்பிரமணிய தம்பிரான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான  திருக்கல்யாண வைபோகம் நவம்பர் 13ம் தேதியும்,  திருத்தேரோட்டம் 15ம் தேதியும், கடைமுக தீர்த்தவாரி 16ம் தேதியும் நடைபெறுகிறது. மயிலாடுதுறையில் உள்ள  பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் துவங்கியுள்ள நிலையில் 16ஆம் தேதி கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.




மயிலாடுதுறை அருகே வேப்பமரத்தில் திடீரென வழிந்த பால், மஞ்சள், குங்குமம் பூசி பக்தி பரவசத்துடன் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கார்த்தி என்பவரது வீட்டின் பின்புறத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேப்பமரம் ஒன்று இருந்து வருகிறது. சுமார் பத்து அடி உயரமுள்ள இந்த வேப்ப மரத்தில் நேற்று காலை திடீரென பால் வடிந்துள்ளது. மரத்தின் உச்சியில் இருந்து பால் வடிந்த காட்சிகளை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் பார்க்க குவிந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து வேப்ப மரத்திற்கு குங்குமம், மஞ்சள் பூசி பூக்களிட்டு தீபாராதனை செய்தனர்.


Chief Justice Of India : தந்தை இருக்கையில் மகன்! உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியானார் சந்திர சூட்...யார் இவர்?




தொடர்ந்து கிராம மக்கள் படையெடுத்து சென்று வேப்ப மரத்தினை ஆச்சரியமுடன் பார்த்து வழிபட்டு வருகின்றனர். திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வை காண்பதற்கு சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வர தொடங்கியுள்ளனர்.