மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 




இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் கடந்த ஐந்தாம் தேதி மகா கணபதி ஹோமம் செய்யப்பட்டு ருத்ர யாகம் முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இன்று நான்காம் காலை ஆகசாலை பூஜை நடைபெற்று, தொடர்ந்து மகா ருத்ர பராயானம் நடைபெற்று.


120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்: யாருக்கெல்லாம் தெரியுமா?




அதனைத் தொடர்ந்து பூர்ணகாதி செய்யப்பட்டு, கடம் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம்வந்து அமிர்தேடேஸ்வரர், அபிராமி அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திருக்கடையூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


TTV Dhinakaran:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் வாபஸ்: டிடிவி தினகரன் சொன்ன காரணம் என்ன?









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண