மயிலாடுதுறையில் அசிக்காடு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோயில் மற்றும் செம்மங்குளக்கரை முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அசிக்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சொக்கட்டான் விளையாட்டில் பொய் சொன்ன, அம்பிகை சாபம் காரணமாக பசுவாக பிறந்து சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற ஆலயம் என்று ஆலயத்தின் புராண வரலாறு தெரிவிக்கின்றது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 14 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது.
இதனிடையே யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் கொண்ட கடங்கள் 4 காலயாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகாபூர்ணகுதிக்கு பின்னர் மேளதாளங்கள மங்கள வாத்தியங்கள் முழங்க புனித கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர கலசங்களில் புனிதநீர் உற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை கூரைநாட்டில் செம்மங்குளக்கரையில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை அடுத்த கூரைநாட்டில் செம்மங்குளக்கரையில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வ கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 13 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று காலை நான்காம் காலை யாகசாலை பூஜை முடிவடைந்து புனித நீர் அடங்கிய கடங்களை மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்து அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கலசத்தில் புனிதநீர் உற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.