சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற  மகாயாகத்தில் தைவான் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இவ் சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது.  இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.


Latest Gold Silver Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு




18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், மேலும் இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.


Formula 4 Racing: சென்னை கார் பந்தயத்தை காலவரையின்றி ஒத்திவைத்த தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!




இந்நிலையில் உலக நன்மை வேண்டி 18 சித்தர்கள் ஒளிலாயத்தில் சிறப்பு ருத்ர மகா யாகம் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் அருண் கணேஷ் குருக்கள் தலைமையில் 48 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 மூலிகைகள் கொண்டும் 48 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ருத்ர மகா யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒளிலாயத்தில் அருள்பாளிக்கும் 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த ருத்ர மகா யாகத்தில் தைவான் நாட்டை சேர்ந்த வெளிநாட்டவர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு செய்தனர்.


CM Relief Fund: மிக்ஜாம்: ஒரு மாத ஊதியத்தை அள்ளிக் கொடுத்த முதலமைச்சர்: எம்.எல்.ஏ, எம்.பி.,க்களுக்கு முக்கிய உத்தரவு