மயிலாடுதுறையில் மயூரநாதர் கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற மயூர நாட்டியாஞ்சலி விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து நாட்டியக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

Continues below advertisement

மயூரநாதர் திருக்கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான பிரசித்தி பெற்ற மயூரநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த மகா சிவராத்திரி விழாக்களில் மயிலை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 18 -ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 

மீண்டும் அப்படி ஒரு போராட்டத்தை நடத்த நிர்பந்தம் நெருக்கடியை மத்திய அரசு உருவாக்கி வருகிறது - முத்தரசன்

Continues below advertisement

மகா சிவராத்திரி விழா 

இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகின்ற பிப்ரவரி 26 -ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை  சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19 -ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நேற்றிரவு தொடங்கியது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வானது தொடர்ந்து பிப்ரவரி 26 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

BYD Sealion 7 Vs BMW X1 LWB: சீலியன் 7 Vs X1 LWB எந்த பிரீமியம் EV பெஸ்ட்? கொடுத்த காசுக்கு எது வொர்த்து?

வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்பு 

இந்த விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் மங்கள இசையுடன் துவங்கியது. மேலும் நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திருக்கோவிலூர் பாலாஜி குழுவினரின் மங்கள இசை உடன் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பத்மபூஷன் ஷோபனா மாணவிகளின் குழுவினர் அரங்கேற்றிய நாட்டியஞ்சலி,  மயிலை சப்தஸ்வரங்கள் குழுவினர் நிகழ்த்திய இராமாயண நாடகம் குறிப்பிட்ட உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்வில் இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் 500 -க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.