தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில், 22 -வதும், காவிரிக்கரையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவதும், சந்திரன் சாப விமோசனம் பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 




இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இந்த பழமையான ஆலயத்தின் இந்தாண்டுக்கான ஆண்டு பங்குனி உத்திரபெருவிழா, கடந்த 27 -ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய திருவிழாவான இன்று, பாரம்பரியமாக, மயிலாடுதுறை அடுத்த மல்லியம் கிராமத்திற்கு பெருமாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளும் ஐதீக விழா நடைபெற்றது. 


TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..? லேட்டெஸ்ட் அப்டேட் இதோ..




இதனை முன்னிட்டு, மல்லியம் கிராமத்திற்கு பல்லக்கில் அங்குள்ள வசந்த மண்டபத்தில் பரிமளரெங்கநாதர் எழுந்தருளினார். அவருக்கு கிராம எல்லையில் பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்து பூர்ணகும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேதியர்கள் வேத மந்திரங்கள் ஓத பெருமாள் மல்லியம் கிராமத்தில் பொதுமக்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை களுக்கு பிறகு ஆலயம் திரும்பும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


IPL 2023: தோனிக்கு முழங்காலில் காயமா..? இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம்.. மீண்டும் ஜடேஜா கேப்டனா..?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண