தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
31.03.2023 மற்றும் 01.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


02.04.2023 முதல் 04.04.2023 வரை:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை   பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


திற்பரப்பு (கன்னியாகுமரி) 5, சின்கோனா (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வால்பாறை PTO  (கோயம்புத்தூர்) தலா 4, சூளகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்) தலா 3, ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சிற்றாறு (கன்னியாகுமரி), மேல் கூடலூர் (நீலகிரி), எமரலாடு (நீலகிரி), கெட்டி (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), குந்தா பாலம் (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி) தலா 2, தர்மபுரி,  உதகமண்டலம் (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சோத்துப்பாறை (தேனி), எடப்பாடி (சேலம்), அவிநாசி (திருப்பூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), தர்மபுரி PTO, கூடலூர் பஜார் (நீலகிரி), மாரண்டஹள்ளி (தருமபுரி), கொடநாடு (நீலகிரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 1.


மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


IPL 2023: தோனிக்கு முழங்காலில் காயமா..? இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம்.. மீண்டும் ஜடேஜா கேப்டனா..?


அதிமுக வழக்கு: இறுதி விசாரணைக்கு தயார்: உயர்நீதிமன்றத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் ஒப்புதல்


MS Dhoni Record: மூன்று சாதனைகளை கெத்தாக படைக்க வாய்ப்பு.. காத்திருக்கும் ’தல’ தோனி..!