ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, இன்று அனுபவமிக்க தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 


கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி, யாரும் எதிர்பார்க்காத சுழலில் கோப்பையை கைப்பற்றி கெத்து காட்டியது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளையும் வென்று அசத்தியது. இந்தநிலையில், இன்று சென்னை அணி பழி தீர்க்கும் முயற்சியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளலாம். 


இந்தசூழலில் சென்னை அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு சென்னையில் நடந்த பயிற்சியின் போது சென்னை அணி கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது எம்.எஸ். தோனி பேட்டிங் செய்யவில்லை என்று கூறப்பட்டது. 


இதுகுறித்து, சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “என்னை பொறுத்தவரை கேப்டன் எம்.எஸ். தோனி 100 சதவீதம் விளையாடுவார். வேறு எந்த மாற்றமும் இருக்காது. ” என்றார். 


குஜராத் டைட்டன்ஸ் அணி:


ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மான் கில், கோனா பாரத், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், முகமது ஷமி, பிரதீப் சங்வான், ஆர் சாய் கிஷோர், விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ரஷித் கான், சிவம் மாவி, மேத்யூ வேட், ஓடியன் ஸ்மித், உர்வில் படேல், தர்ஷன் நல்கண்டே, டேவிட் மில்லர், ஜோஷ் லிட்டில், யாஷ் தயால், ஜெயந்த் யாதவ், நூர் அகமது, அல்சாரி ஜோசப்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:


மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே, சிசண்டா மகலா, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், அஹய் சிந்து, நிஷாந்த், ராஜ்வர்தன் ஹாங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, சிமர்ஜீத் சிங், மதிசா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா, பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, ஷேக் ரஷித், துஷார் தேஷ்பாண்டே. 


நரேந்திர மோடி மைதானம் எப்படி..? 


கடந்த ஆண்டு அகமதாபாத்தின் புதிய நரேந்திர மோடி மைதானத்தில் இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இதில், இரண்டிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது. குவாலிபயர் 2ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. அதேபோல், இறுதிப் போட்டியுல்  குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி கோப்பை வென்றது. 


மைதானத்தில் உள்ள பிட்சானது பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்குமே சாதகமான மைதானம் ஆடும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அகமதாபாத்தில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில், ஷுப்மான் கில் சதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


விளையாடிய ஐபிஎல் போட்டிகள் : 7


முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்ற போட்டிகள் : 2


இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் வென்ற போட்டிகள் : 5


போட்டிகள் டை : 0


கைவிடப்பட்ட போட்டிகள் : 0


அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : 106* - ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான்) எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 2022


சிறந்த பந்துவீச்சு புள்ளிகள்: 3/17 - ஹர்திக் பாண்டியா (குஜராத்) எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ், 2022


அணியின் அதிகபட்ச ஸ்கோர் : 179/5 - பஞ்சாப் கிங்ஸ் எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த 2021 ம் ஆண்டு 179 ரன்கள் எடுத்தது. 


குறைந்த அணி ஸ்கோர் : 123/9 - பஞ்சாப் கிங்ஸ் எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2021ம் ஆண்டு 123 ரன்கள் எடுத்தது. 


அதிக வெற்றிகரமான ரன்-சேஸ்: 167/3 - டெல்லி கேபிடல்ஸ் எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த 2021ம் ஆண்டு 167 ரன்கள் எடுத்தது. 


சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் : 155