கீரனூரில் அமைந்துள்ள  பழமையான  அய்யனார் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் பக்தர்கள் தேரினை தலையில் சுமந்து வலம் வந்தனர்.


திருவாரூர் மாவட்டம் கீரனூரில் பழமையான அருள்மிகு அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் காவல் மற்றும் குலத்தெய்வமாக விளங்கும் இக்கோயில்களில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், எல்லை தேர்பவனி, தேர் திருவிழா, தீமிதி ஆகிய உற்சவங்கள்  நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உற்சவம் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.




அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெற்றது வந்தது. தொடர்ந்து  விழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் மற்ற கோயில்களைப் போல் வீதிகளில் தேரை இழுத்துச் செல்லாமல் மாறாக  நூதன முறையில் தேரினை தலையில்  சுமந்து தூக்கி கொண்டு 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஊர் எல்லையான வயல் பகுதியை சுற்றிவந்து மீண்டும் கோயிலை அடைந்தனர். 


TN 10th Public Exam: தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; நேரில் ஆய்வுசெய்த அமைச்சர் அன்பில்




விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் ஒற்றுமையை மேம்படுத்தவும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்மனை தரிசனம்  செய்து வழிப்பட்டனர். மேலும், வேறு எங்கும் இல்லாத நிகழ்வாக தேரினை தலையில் சுமந்து செல்லும் இந்த காட்சி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் கடும் பஞ்சம்... வரலாறு காணாத அளவுக்கு வட்டி அதிகரிப்பு... திணறும் மக்கள்...!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண