மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மேலமங்கநல்லூர் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த வலம்புரி விநாயகர், மற்றும் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் செய்ய அப்பகுதியினர் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோயில் சிலைகள் சீரமைப்பு,  வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. 




இந்நிலையில் புனரமைப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று முடிந்தததை தொடர்ந்து,  இன்று ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாக்காக, யாகசாலை அமைக்கப்பட்டு, வேதவிற்பன்னர்களை கொண்டு தொடர்ந்து நான்குகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.


1954 இல் வெளியான ரூ.1000 நோட்டில் பெரிய கோவில் படம் - இது எத்தனை பேருக்கு தெரியும்..?




கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை நிறைவுற்று, பூஜையின் முடிவில், மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க மகாகும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Edappadi Palanisamy: எட்டப்பர்களுக்கு இந்த தேர்தல் பாடமாக அமைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்




இதேபோன்று  சீர்காழியில் புற்றடி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழாவில் 300 மேற்பட்டோர் பால் குடம் ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோயில். இங்கு ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளி கிழமை  அன்று தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டு இரண்டாவது வெள்ளி கிழமையான இன்று புற்றடி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா வெகுவிமரிசையாக  நடைபெற்றது. 


பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அதிகமாக மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு - கரூர் ஆட்சியர் தகவல்




இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது சீர்காழியின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து நிலையை அடைந்தது. மேலும், திருத்தேருக்கு முன்பாக வேண்டுதலை நிவர்த்தி செய்ய பக்தர்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் பால் குடம் ஏந்தியும், அலகு காவடி எடுத்தும், புற்றடி மாரியம்மனை வழிபட்டனர். பக்கதர்களுக்கு தேரில்  அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.