குளித்தலை கருவையன் அய்யனார் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா.


குளித்தலை அருகே மேல குட்டப்பட்டியில் கருவையன் அய்யனார் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலகுட்டப்பட்டியில் கருவையன் அய்யனார், விநாயகர், முருகன், அக்னி பாப்பாத்தி அம்மன், பனையடியான் தேரடி கருப்பு, லாட சன்னாசி, மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் முடிவு செய்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


 


 




 


தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜனவரி 25ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்திற்கு சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட இரண்டு கால யாகவேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை  நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை ஊர்வலமாக கொண்டு சென்று கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். பின்னர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்களுக்கு புனித நீரினை தெளிக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். இதில் மேல குட்டப்பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


 





 


 


அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.


கரூர் நகரப் பகுதியில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பணிகள் நிறைவு பெற்று அஷ்டவந்தன கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே சிவாச்சாரியார் யாக சாலை அமைத்து, யாக குண்டத்தில் முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் யாக வேள்வி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க யாகத்தில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தார். 


 




 


 


பின்னர் பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி கோசம் எழுப்ப பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் சித்தி விநாயகருக்கு பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபானை காட்டப்பட்டது. கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழாவை காண ஏராளனமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.