மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலாநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத மகாதேவ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவை நடத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கோயில்  திருப்பணிகள் நடைபெற்று வந்தது.




பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகத்திற்கான நாள் குறிக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  விழாவானது கடந்த ஆறாம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து, மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.


Srilankan President India Visit: இந்தியாவிற்கு விசிட் அடிக்கும் ரணில் விக்ரமசிங்கே.. பல்வேறு முக்கிய கோப்புகள் கையெழுத்தாக வாய்ப்பு?




அங்கு வேத மந்திரங்கள் ஓத, விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதே போல கிராமத்தில் உள்ள கிராம கோயில்களான மகா சாஸ்தா, மாரியம்மன், ருத்ராபதியார் கோயில்களிலும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


Gautam Adani: ஆறு மாதங்களில் ரூ. 5 லட்சம் கோடி இழந்த அதானி… ஆண்டின் முதல் பாதி முழுவதும் சரிவு!


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண