மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாலங்காடு மாம்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் திருக்கோயில். இங்கு பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்து உடனே நிறைவேறும் என்பது அப்பகுதி பொதுமக்கள் நம்பிக்கை. இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.


கரூர் சந்தன கருப்பண சுவாமி ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலய 12ஆண்டு சித்திரைத் திருவிழா.




 


அந்தவகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் காப்புகட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் மற்றும் காவடித் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதில், காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், உடல், நாக்கில் அலகு குத்தியும், காவடி எடுத்து மாம்புள்ளி கிராமத்தின் அனைத்து வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். 


பிரசித்தி பெற்ற ஆறுபாதி கீழமாரியம்மன் கோயில் தீமிதி விழா; நேர்த்திக்கடன் செலுத்திய திரளான பக்தர்கள்





இந்த ஊர்வலத்தில் பக்தர் ஒருவரின் உடலில் 100-க்கு மேற்பட்ட இடங்களில் இரும்பு கொக்கி மாட்டி அலகு குத்தி, அந்த கொக்கியை தாம்புக்கயிறு கட்டி உறவினர்கள் பிடித்து வர நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியது பார்ப்பவர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து கோயிலின் முன்பு சக்தி கரகத்தை இறக்கி வைக்கும்போது,  மேள தாள மங்கள வாத்திய இசைக்கு ஏற்ப 7 வயது சிறுவர் முதல் 70 வயது முதியவர்கள் வரை அருள்வந்து ஆடினர். பின்னர், கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில்,  அவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் கதம்பவள்ளி சின்னையன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா தொடக்கம்; அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா