குத்தாலத்தில் 144 வது ஆண்டாக தொடரும் பாரம்பரிய விழா - என்ன விழா? விபரம் உள்ளே....!

குத்தாலம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 144 வது ஆண்டு தீமிதி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழந்தூர் தென்பாதி பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுவது வழக்கம்.  அந்த வகையில் இந்தாண்டு 144 வது ஆண்டு சித்திரை திருவிழா  சித்திரை திருவிழா கடந்த 26 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

Continues below advertisement

கரூர் சந்தன கருப்பண சுவாமி ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலய 12 ஆண்டு சித்திரைத் திருவிழா.


அதனைத் தொடர்ந்து கோயிலில் நாள்தோறும் அம்பாள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள்  மேள தாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் முன்னே செல்ல ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா தொடக்கம்; அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா


அதனைத் தொடர்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் 20 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் சிலர் தீமிதித்த காட்சி அங்கு திரண்டிருந்த மக்களை பக்தி பரவசமடையச் செய்தது. தீமிதியை தொடர்ந்து சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீமிதி திருவிழாவில் உள்ளூர் மட்டும் இன்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

பிரசித்தி பெற்ற ஆறுபாதி கீழமாரியம்மன் கோயில் தீமிதி விழா; நேர்த்திக்கடன் செலுத்திய திரளான பக்தர்கள்

Continues below advertisement
Sponsored Links by Taboola