மேலமங்கைநல்லூரில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத வைபவம் தீமிதி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.


மேலமங்கைநல்லூரில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலமங்கை நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம். இந்த கோயில் இப்பகுதியில் உள்ள பலரின் குலதெய்வமாக இருந்து வருகிறது. மேலும் பக்தர்களின் அனைத்து வேண்டுதலையும் அம்மன் நிறைவேற்றி தருவதாக இந்த அம்மனை வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை. ஆகையால் இவ்வாலயத்தில் ஏராளமானோர் திருமணம், குழந்தை பேறு உள்ளிட்ட பல வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இவ்வாலயத்தின் மகாபாரத வைபவம் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழாவானது கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர்! நாடு முழுவதும் மாற்றுகிறதா மத்திய அரசு?




விழாவின் பல்வேறு நிகழ்வுகள் 


அதனைத் தொடர்ந்து நாள்தோறும் துரோபதி அம்மன், கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, மாடுபிடி சண்டை, அரவான் களபலி, கீதை உபதேசம், உள்ளிட்ட நாடகங்கள் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. 


WT20 WC: வங்கதேசத்தில் அசாதாரண சூழல்! மகளிர் டி20 உலகக்கோப்பை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடித்தது ஜாக்பாட்!




விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 


தீமிதி விழாவை முன்னிட்டு விரதம் இருந்து பக்தர்கள் கையில் காப்பு  கட்டிக்கொண்டு வீரசோழன் ஆற்றில் இருந்து சக்தி கரகத்துடன், மேளதாள மங்கல  வாத்தியங்கள் முழங்க காளி ஆட்டங்களுடன் ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.  அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் குத்தாலம் தாலுக்காவில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கு; எங்கெல்லாம் தெரியுமா?விவரம்!