3, வை ராஜா வை திரைப்படங்களை அடுத்து ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் மையக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நடிகர்கள் செந்தில், தம்பி ராமைய்யா நடிகைகள் நிரோஷா, ஜீவிதா எனப் பலரும் நடித்துள்ளனர். 


90களில் நடந்த கதை, கிரிக்கெட் மற்றும் மத அரசியலைப் பேசும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பாட்ஷா படத்துக்குப் பிறகு இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் இஸ்லாமியக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று இப்படம் காலை 9 மணிக்கு இப்படத்தின் முதல் காட்சி வெளியாகிறது.


இந்நிலையில், வெளிநாடு, மற்றும் அண்டை மாநிலங்களில் லால் சலாம் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றைப் பார்க்கலாம்!


 






ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் பவர்ஃபுல் மெசேஜை சொல்லியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


 






“கண்டெண்ட்டை மையப்படுத்திய படம், உணர்ச்சிகரமான ஆழமான ஸ்போர்ட்ஸ் டிராமா, கூஸ்பம்ப்ஸ் கண்டிப்பாக வரும். கௌதம் மேனன், வெற்றிமாறன், பாண்டிராஜ் படங்கலைப் பார்த்தது போல் உணர்வு, ஐஸ்வர்யாவுக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.


 






“படம் ஆழமான கருத்தைக் கொண்டிருந்தாலும், அது சொல்லப்பட்ட விதம் சுமாராக உள்ளது. விக்ராந்த், விஷ்ணு விஷால் நல்ல பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளனர். மொய்தீன் பாயாக  நீளமான சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். திரைக்கதை வேகமாக இருந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.


 






"மனித நேயம், மதத்தை வெல்ல வேண்டும், சமீபத்திய படங்களில் இரண்டாம் பாதி சொதப்பலாக உள்ளது, ஆனால் லால் சலாம் இரண்டாம் பாதி பெட்டராக வந்துள்ளது. படம் வெற்றி பெற்றுவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.


 






"முழுக்க முழுக்க கண்டெண்ட் சார்ந்த படம், குடும்பத்துடன் சென்று பார்க்கலாம், மாஸ் காட்சிகளும் உள்ளன. வசனங்கள் அருமை. சூப்பர் ஸ்டாருக்கு வரும் பிஜிஎம் நல்லா இருக்கு” எனக் கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Lal Salaam: “மொய்தீன் பாய்” மட்டுமா..? ரஜினி இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய கேரக்டர்கள் என்னென்ன தெரியுமா?


Lal Salaam Release LIVE : மொய்தீன் பாய் தரிசனம்.. முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!