தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறையை மீறி செயல்படும் வாகனங்களுக்கு ஆன்லைனில் காவல்துறையினர் வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் ஆன்லைனில் அபராதம் தவறான முறையில் விதிப்பது தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனை சீர்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வலியுறுத்தி, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 200 க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு வழங்கினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில்,



இது தொடர்பாக விரைவில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரை மனு அனுப்ப உள்ளதாகவும், போக்குவரத்து தொழில் அழிந்துவரும் சூழலில் காவல்துறையினர் இதுபோன்று ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதால் அதிகளவில் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டீசல் விலை ஏற்றம் சுங்கசாவடி கட்டணம் என லாரி தொழில் அழிந்து வருகிறது. அரசு உடனடியாக இதனை சீர்படுத்தி முறையாக அபராதம் விதிக்க வேண்டும் தவறு செய்பவர்கள் மீது அபராதம் மிதிக்க வேண்டும் வேண்டுமென்றே வாகன நம்பரை எழுதி வைத்துக்கொண்டு காவல்துறையினருக்கு தேவைப்படுகின்ற பொழுது அபராதம் விதிப்பது மிகவும் வேதனைக்குரியது. இந்த செயலை முறைப்படுத்தி அரசு லாரி உரிமையாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.


இதேபோன்று சேலம் மாவட்டம் சின்ன கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகாமி இவர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அளித்தார். அதில் தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், தாங்கள் இருக்கும் இடத்தை தனது மருமகன் அபகரிக்க நினைத்து வருவதாகவும் புகார் மனு அளித்தார். இது குறித்து சிவகாமி கூறுகையில், சேலம் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் ஸ்ரீதேவி மாயா அருட்கோட்டம் டிரஸ்ட் என்ற பெயரில் ஜீவசமாதி வழிபாட்டுத் தளம் உள்ளது. இந்த நிலையில் எனது மகள் சுகன்யாவை கோரிமேடு பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணம் ஆன பிறகு எனது மகளை சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்றும், 5 கோடி மதிப்பிலான சொத்தை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும் எனது மகளை மிரட்டி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த எனது மகள் சுகன்யா தற்கொலை செய்து கொண்டார்.



தற்கொலைக்கு காரணமான எனது மகளின் கணவரும், அவரது அப்பா, அம்மா, அக்கா ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் அவர்களுக்கு சாதகமாக செய்பட்டு வழக்கை முடித்து வைத்தனர். தற்போது என்னையும் எனது மகனையும் சொத்து பிரச்சனையில் விரட்டி வருகிறார் எனவே எனது மகளின் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எனது மகனுக்கும் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்து வரும் பாஜக பிரமுகர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.