இன்று முழு சந்திர கிரகணம் நடைபெறுவதால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருக்கும் பிரபல கோயில் நடைகள் மூடப்பட்டது. 


இன்று  முழு சந்திர கிரகணம் தோன்றுகிறது. இது இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். இந்தியா மற்றும் உலகின் சில பகுதிகளில் இன்று   முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். "இன்று, சந்திரன் பூமியின் நிழலால் மறைக்கப்படும். மற்றும் சிவப்பு நிறமாக மாறும். இது சுமார் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தோன்றும் கடைசி முழு சந்திர கிரகணமாக இருக்கும்.


இந்தியா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளைத் தவிர, ஆசியாவின் பிற பகுதிகள், வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த வானியல் நிகழ்வைக் காண முடியும். முழு நிலவு பூமியின் நிழல் பகுதி வழியாக செல்லும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.


பகுதி சந்திர கிரகணம் ஆரம்பம் - மதியம் 2.39


முழு சந்திர கிரகணம் ஆரம்பம் - மாலை 3.46.


அதிகபட்ச முழு சந்திர கிரகணம் - மாலை 4:29 மணி


முழு சந்திர கிரகணம் முடிவடையும் நேரம் - மாலை 5:11 மணி


இதன் காரணமாக தமிழகம், ஆந்திராவில் உள்ள பிரபல கோவில்களின் நடை அடைக்கப்பட்டுள்ளது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை 11 மணி நேரம் நடைசாத்தப்படுகிறது. மேலும் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




 


மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:


 இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் 22 உப கோயில்கள் காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




 


திருச்சி ஸ்ரீரங்கம் கோயில்:


கிரகணத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று காலை 6.45 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்:


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் நண்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் எனவும் தீர்த்தம் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அனேகமான கோயில்கள மூடப்படும் நிலையில் திருநள்ளாறு மற்றும் காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.