மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த சென்பகச்சேரியில் அமைந்துள்ளது மிக பழைமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ சப்த கன்னியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு, புனிதநீர் கடங்களை வைத்து, இரண்டு கால பூஜைகள் நடைபெற்றது.




தொடர்ந்து இன்று யாகசாலையில் பூர்ணாகுதி நடைபெற்று, புனிதநீர்கடங்களை வேதவிற்பன்னர்கள் தலையில் , சுமந்து, வேத மந்திரங்கள் ஒலிக்க, மேள தாளம் முழங்க, கடங்கள் புறப்பட்டு, கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரங்களை அடைந்தனர். பின்னர், வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க புனிதநீரை கோபுர கலசங்களில் ஊற்றி, கோயில் மகா கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனின் அருளை பெற்றனர்.


கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய 17-ஆம் ஆண்டு பால்குட விழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூறைநாடு அருகே கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 17 ஆம் ஆண்டு பால்குட விழா இன்று வெகுவிமரிசையாக  நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரைகள் காப்பு கட்டி பால்குடம் எடுத்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது பால்குடத்திற்கு வீடு வீடாக பக்தர்கள் தீபா ஆராதனை எடுத்து வழிபட்டனர்.  


Mari Selvaraj Speech: ‘தேவர் மகன் தான் மாமன்னன்.. வன்முறையை விரும்பும் ஆள் நான் இல்லை... மாரி செல்வராஜ் ஓபன் டாக்..!




அதனை தொடர்ந்து பால்குடம் ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. பின்னர் சுவாமிக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கு பாலை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.


திருமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அழகு காவடி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பால்குட திருவிழா கடந்த 23- ஆம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது. 


Veeran Movie Twitter Review: 'தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ ஆனரா ஹிப்ஹாப் ஆதி?’ - வீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!




காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் விக்ரமன் ஆற்றங்கரையிலிருந்து வான வேடிக்கைகள், மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது‌.