Veeran Twitter Review: இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


அன்பறிவு படத்துக்குப் பிறகு இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் “வீரன்”(Veeran). இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆதிரா,காளி வெங்கட், முனீஸ்காந்த், வினய்,சசி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் ஃபார்முலாவில் இந்த படம் உருவாகியுள்ளது.


இதன் ட்ரெய்லரை பார்க்கும்போது கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில்  வெளியான ‘மின்னல் முரளி’  படத்தின் காப்பியா என கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. ஆனால் இதனை மறுத்த படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதேசமயம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படம் தோல்வியை தழுவிய நிலையில், வீரன் படம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. 


இந்நிலையில் வீரன் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இதனை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.