திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. திருமணிமுத்தாற்றின் தென்கரையில் பிரகார மண்டபங்களுடன் பெரிய மதில் சுவரும் 14 கால் மண்டபமும் கருப்பணசாமி பிடாரியம்மன் தென்புறத்தில் பகவதி அம்மன் ஆகிய கோயில்களை அடங்கிய திருக்கோவிலாக அமைந்துள்ளது. 1999-ல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


TET Exam: ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு




10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில், பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக  வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில்  கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் மாலை 4.50 மணிக்கு நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று  ஜூன் 1-ம்  தேதி   காலை10  மணிக்கு நடைபெற்றது. 2-ம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 3-ம் தேதி சனிக்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


HBD Ilaiyaraaja: ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ .. இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ..




Mari Selvaraj Speech: ‘தேவர் மகன் தான் மாமன்னன்.. வன்முறையை விரும்பும் ஆள் நான் இல்லை... மாரி செல்வராஜ் ஓபன் டாக்..!


விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கைலாசநாதர் வைகாசி விசாகப் பெருந்திருவிழா ஆரம்பிப்பதற்கு முன் ஊர்காவல் தெய்வமாகிய திருக்கோவிலைச் சார்ந்த பிடாரியம்மன் கோவிலுக்கு 9 நாட்கள் விசேஷமாக திருநாள் நடத்தப்பட்டு அதன் பின்னர் விசாகத்தை அனுசரித்து மேற்படி திருக்கோவிலில் காப்பு கட்டு விழா நடைபெற்றது.  கொடியேற்றம் நடத்தி வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது முதல் தினமும் காலை மாலை இரு வேலைகளில் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது. நேற்று கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று சிறப்பு வாய்ந்த செண்பகவல்லி அம்மன் கைலாசநாதர் சுவாமி தேரோட்டம் சிறப்பாக ஆர்மபிக்கப்பட்டது. இதில் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து ஊர்வலமாகச் சென்றனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண