108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்ய தேசமாக விளங்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சிதிலமடைந்து.cஇந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த  திருக்கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு  சும்மா ரூபாய் 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  கடந்த 2 ஆண்டுகளாக புறனமைப்பு பணிகள் பழமை மாறாமல் நடைபெற்றது. இந்நிலையில்,cகுடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை, முதல் கால யாக பூஜைகளுடன் துவங்கியcஇவ்விழா, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் அதனைத் தொடர்ந்து, அதிகாலை நான்காம் கால யாக சால பூஜைகள் முடிவுற்ற நிலையில், கலச புறப்பாடு நடைபெற்றது. 




காலை 8.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்ட போது கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் பரவசமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.




ஸ்தல சயனப்பெருமாள்   பெருமாள் கோயில்  புராண வரலாறு


இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை ஒரு காலத்தில், மிகப்பெரிய காட்டுப்பகுதியாக இருந்துள்ளது.  இந்த காட்டுப் பகுதியில் புண்டரீக மகரிஷி  பல ஆண்டுகாலம் தவம் புரிந்து வந்துள்ளார்.  திருமாலை நினைத்து இவர், இந்த காட்டுப் பகுதியில் தவம் புரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  ஒரு நாள் அருகே இருந்த குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை  பறித்து, திருப்பாற்கடலில்  பள்ளி கொண்டுள்ள  திருமாலின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்துள்ளார்.





பூக்களை பறித்து கொண்டு செல்லும் பொழுது குறுக்கே கடல் இருந்துள்ளது. தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக இருக்க ஆரம்பித்துள்ளார்.  கடல் நீரை இறைப்பது அவ்வளவு சுலபமா என்ன ?  ஆனாலும் திருமால் மீது நம்பிக்கையில் கடல் நீரை கையால் இறைத்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக இதையே செய்துள்ளார்.  


கடல் நீர் வற்றட்டும்


ஒரு நாள்  "பரந்தாமா நான் கொண்ட பக்தி  உண்மை என்றால், இந்த கடல் நீர் வற்றட்டும் எனக்கு பாதை கிடைக்கட்டும், அதுவரை இந்த பூவும் வாடாமல் இருக்கட்டும் என திருமாலிடம் வேண்டியுள்ளார். இந்த நிலையில், முனிவர் முன் ஒரு முதியவர் தோன்றியுள்ளார். அந்த முதியவர்   மகரிஷியிடம் வம்பு இழுத்துள்ளார். அதன் பிறகு எனக்கு  உணவு வேண்டும் என கேட்டுள்ளார். மகரிஷியும் நான் என்றோ ஒரு நாள் இந்த கடல் நீரை வற்றவைத்து பெருமாளை காண்பேன்.





இப்பொழுது உனக்காக உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் அந்த பணியை தொடர்வேன் என கூறிவிட்டு அதுவரை என்னுடைய மலர்களை நீ கையில் வைத்திரு என அந்த, தாமரை மலர் கூடையை கொடுத்து விட்டு சென்றுள்ளார். முதியோருக்காக உணவு எடுக்கும் சென்ற மகரிஷி உணவு கொண்டு வந்த பொழுது, கொடுத்துச் சென்ற பூக்களையெல்லாம் சூடிக் கொண்டு, கடலிலேயே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில் முதியவர் காட்சியளித்தார். மகரிஷிக்கு சயன கோலத்தில் காட்சி அளித்ததால் இத்தல பெருமாள் ‘தலசயனப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார் என புராணங்கள் கூறுகின்றன.