தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடை பெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
யானைகளின் மீதேற்றி நடைபெற்ற திருமுறை வீதியுலா
திருக்கோயில்களில் 10 நாள்கள் நடத்தப்படும் உற்சவங்களில் 4- ஆம் நாள் திருவிழாவில், திருமுறைகளை வீதி உலா எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்து அமைந்துள்ள பழமையான தருமபுரம் ஆதீனத்தில் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனம் 25-ஆவது குருமகா சந்நிதானம் காலத்தில் 5 யானைகளின் மீதேற்றி திரு முறை வீதியுலா நடைபெற்றுள்ளது. பின்னர் சில காரணங்களால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.
தற்போது இந்த ஆண்டு ஞானபுரீஸ்வரர் பெருவிழா ஞானபுரீசுவரர் கோயிலில் கடந்த மே 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 4-ஆம்நாள் திருவிழாவான யானை மீதேற்றி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது. அதனையொட்டி, ஆதீன திருமடத்தில் இருந்து தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நிறுத்தப்பட்டிருந்த யானை மீது திரு முறைகளை ஏற்றி, ஆதீன ஓதுவாமூர்த்திகள் சண்முக திருவரங்க யயாதி அமர்ந்துகொள்ள, தருமபுரம் ஆதீன தேவார பாட சாலை மாணவர்கள் திருமுறை களை வாசித்தவாறு முன் செல்ல, ஆதீனத்தின் நான்கு வீதிகளின் வழியே திருவீதியுலா நடைபெற்றது.
பூரண கும்ப மரியாதை
ஆதீனத்தின் மேற்கு வாசலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமா சிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், திருமுறைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வீதியுலாவில் வீடுகள் தோறும் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். இதில், ஆதீனக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் கல்லூரிச் செயலர் ரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சி. சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தரிசனம் செய்தனர்.
TN School Reopen: தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முக்கிய நிகழ்வுகள்
விழாவின் முக்கிய நிகழ்வான 26-ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ம் தேதி திருத்தேர் உத்ஸவமும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற மே 30 -ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கு உள்ளார்.
கரூரில் பெய்த கனமழையால் அமராவதியில் பெருக்கெடுத்து ஓடிய நீர்- மகிழ்ச்சியில் விவசாயிகள்